மணிவண்ணன் பிணையில் விடுதலை!

 


பிந்திய செய்தி

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்  மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கைவிலங்குடன் இழுத்துவரப்பட்ட மணிவண்ணன்!

இன்றிரவு கையில் விலங்கிடப்பட்டு யாழ்.நீதிமன்றம் அழைத்துவரப்பட்டுள்ளார் யாழ்.நகர பிதா வி.மணிவண்ணன்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியாவில் விசாரணைகளிற்குள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் இன்றிரவு யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார். 

நீதிமன்றில் விசேட அறையில் அவர் தொடர்பா விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 15ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்; முன்னிலையாகி மணிவண்ணிற்காக வாதாடிவருகின்றனர்.
No comments