குருந்தூர்மலை ஆகழ்வு! வெளிப்பட்டது தொல்லியல் சிதைவுகள்!


தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 18 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கபட்டுள்ள நிலையில் தொல்லியல் திணைக்களத்தோடு இராணுவம் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்தேகத்துக்கிடமான சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஆனாலும் இது சிவலிங்கமா அல்லது வேறு தொல்லியல் சிதைவுகளா என்பது குறித்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



No comments