சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி?

 


இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளது

இதனிடையே வடக்கு மாகாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்டவர்களுள் ஒருவர் தெல்லிப்பழை வைத்தியசாலை மருத்துவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா உறுதி செய்யப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்கிய நோயாளி ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு. பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments