வீரியம் கூடிய கொரோனா வடக்கிலாம்?இலங்கையில் புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள 16 பேரில் 13 பேர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வடமாகாணத்திலுள்ள பம்பைமடு, முழங்காவில்  ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதேவேளை ஏனையோரில் ஒருவர் அவிசாவளை பிரதேசத்திலும் மற்றைய இருவர் கொழும்பு பகுதியிலும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றானது, சைப்பிரஸ், ஜோர்தான், டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் மூலம் பரவியுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில், கண்டறியப்பட்டுள்ளது.


No comments