அமெரிக்காவில் குடியேற்ற நடைமுறை மாற்றம்! லட்சக்கணக்கானவர்களுக்கு வாய்ப்பு!

 


அமெரிக்க குடியேற்ற முறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான மூன்று உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், முன்னாள் அதிபர் பைடன் பிறப்பித்த கடுமையான விதிகளை தளர்த்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மூன்று புதிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் ஏற்கனவே உள்ள குடியேற்ற கொள்கைகளை ஆய்வு செய்யவும், சிறப்பான குடியேற்ற கொள்கையை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த, 180 நாட்களுக்குள் நிபுணர் குழுவிடம் இருந்து பெறும் ஆலோசனைகளின் அடிப்படையில், அமெரிக்க குடியேற்று கொள்கையில் மாற்றம் செய்யப்படும்.

அவ்வாறு குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டால் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் மற்றும் இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற முடியும்.

ஏற்கனவே உள்ள விதிகளின்படி அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் பிரிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் குழந்தைகளை இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

எல்லையில் 5,500 குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பைடனின் இரண்டாவது உத்தரவின்படி, புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு ஒன்று அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள் குறித்து ஆராய்ந்து, மனிதநேய அடிப்படையில் அவர்களை அனுமதிப்பதற்கு பரிசீலிக்கவும், அவர்களை பராமரிப்பதற்கும் புதிய திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்த பைடன் அரசு திட்டமிட்டுள்ளதால் இந்தியர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் குடியேறமுடியும்.

 

 

 

No comments