மனிதத் தலை வீச்சு!! மூவர் கைது!


மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சப்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து திருகி எடுக்கப்பட்டடதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது.

தலை வீசப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரை பயமுறுத்தவே மனிதத் தலையை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து திருகி எடுத்து வீசியதாக சந்தேக நபர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் கூறும்போது:-

எனது வீட்டுக்கு முன் வீதியில் நின்று கொண்டிருக்கும் போது மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மாலை ஏழு மணியளவில் வலிந்து என்னுடன் முரண்பட்டுச் சென்றர். பின்னர் இரவு 9.30 மணியளவில் எனது வளவினுள் சத்தம் ஒன்று கேட்டது நான் வெளியில் வந்து பார்த்த வேளை மோட்டார் சைக்கிளில் மூவர் விரைந்து செல்வதனை அவதானிதேன். அதன் பின்னர்  எறியப்பட்ட பொருளை பயம் காரணமாக என்னவென்று தெரியமுன்னர் அதனை சவளால் அப்புறப்படுத்தினேன். பின்னர் அது மனிதத்தலையென தெரியவந்தது என்றார்.

No comments