யாழில் கப்ரால்!யாழ்.வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக இன்று (27) யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் பங்கேற்றுள்ளார்;.

இந்த கலந்துரையாடலில் யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சற்குணராஜா மற்றும் யாழ் பல்கலை கழகத்தின் துறைசார் பீடங்களின் பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான அஜித் கப்ரால் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

எனினும் ராஜபக்ச ஆட்சியில் நிதி அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.


No comments