மைத்திரியே மீண்டும் தலைவர்!

 


மைத்திரியை உள்ளே தள்ள பொதுஜனபெரமுன மும்முரமாகியுள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், சுதந்திரக்கட்சியின் செயலாளராக தயாசிறி ஜயசேகரவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் நேற்று கூடியது.

இந்த கூட்டத்திலேயே அவர்களை தலைவர் மற்றும் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments