இம்ரான்கான் வேண்டவே வேண்டாம்!


இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லையெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், அவர் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது உரையாற்றுவது நிறுத்தப்பட்டுள்ளபோதும் வருகை தருவது தவிர்க்கப்பட்டுள்ளதாவென்பது உறுதியாகவில்லை.

இதனிடையே வடக்கிலுள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையென சீனா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இதை தெரிவித்துள்ளது.

இது முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கை, சர்வதேச ஏல நடைமுறைகளுக்கமையவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், எந்தவொரு நாடாக இருந்தாலும் நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.


No comments