தமிழ் முன்னால் வந்தது!புதிய யாழ் நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் திறப்பு விழாவில் திறப்பு விழா பெயர்பலகை முதல் நகரங்களது பெயர்பலகைகள் வரை சிங்களத்திற்கு முன்னுரிமை வழங்கி நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்த அரசியல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திறப்பு விழா பெயர்பலகை தொடர்பில் முதல்வர் வி.மணிவண்ணனின் எதிர்ப்பையடுத்து ஒரேயளவாக தனி தனியாக தமிழ் மற்றும் சிங்கள பெயர் பலகைகள் நாட்டபட்டது.


அதே போன்றே நகர பெயர் பலகை திருத்தம் செய்யப்பட்டு தமிழிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் கையளிக்கப்படும் வரை நகர அபிவிருத்தி அதிகார சபை வசமேயிருந்தமையால் பெயர்பலகை விடயத்தில் தலையிட முடியாமல் போனதாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் விளக்கமளித்துள்ளார்.


No comments