புலனாய்வு துறையே சிபார்சு செய்தது?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு

அருணினை புலனாய்வு பிரிவே தமக்கு பரிந்துரைத்ததாக அங்கயன் இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.

மீண்டும் புலனாய்வு பிரிவு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை நடத்த அருண் மற்றும் ஈபிடிபி மீனவ அமைப்புக்கள் முன்வந்துள்ளன.நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைத்ததுடன் சிறீலங்கா அரசின் புலனாய்வு துறையின் பின்னணியில்  இயங்கும் ஆவா குழுவின் முக்கியஸ்தரான ஆவா அருண் பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளன.இதற்காகன ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

மேலும் சிறீலங்கா அரசை காப்பாற்றும் விதமாக சிறீலங்காவிற்கு ஆதரவாக தமிழர்களை கொண்டு தமிழ் மக்களின் நீதிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் வேலைகளையும் சிறீலங்கா புலனாய்வு துறை இவனிடம் கையளித்துள்ளதாக அறியமுடிகிறது.


இவன் கடந்த காலங்களில் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலில் பேரினவாதிகளின்  ஊடகங்களிலும் சிங்களத்திற்கு ஆதரவாக உளறியவன் என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை ஆவா குழுவென டையாளப்படுத்த சிங்கள ஊடகங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளின் பின்னணியில் அருண் செயற்பட்டுவரும் நிலையில் அருணிற்கும் தனக்கும் தற்போது தொடர்பில்லையென மறுதலித்துள்ள அங்கயன் அருணினை புலனாய்வு பிரிவே தக்கு பரிந்துரைத்ததாக அங்கயன் இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.


No comments