சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன் - மாவை சேனாதிராஜா


நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன். இதற்கு உரியவாறு பதில் வழங்குவேன் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையின் முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அது மட்டுமன்றி கூட்டமைப்பு கட்சி தலைவர்களுடன் பேசியே முடிவுகள் எடுக்கப்பட்டன.

சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கிறேன். அவர் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னரும் கட்சி தலைவர்,பொதுச் செயலாளர் மீதும் குற்றச்சாட்டு முன்வைத்தார். அதுபோல்தான் தற்போதும் முன்வைத்துள்ளார். அவருக்கு பதில் இப்பொது கூறவில்லை. புத்தாண்டு தினத்தில் அவ்வாறு செய்தி வருவதில் நான் உடன்படவில்லை. 02 ஆம் திகதிக்கு பின்னர் பதில் வழங்குவேன். உரிய முறைப்படி கட்சி செயற்குழுவை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments