வாக்குமூலமளிக்க மறுத்த கஜேந்திரன்?


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை; சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் இணைந்து இந்தத் துப்புரவுப் பணியினை முன்னெடுத்தனர்.

காலை முதல் நண்பகல் வரை நடைபெற்ற சிரமதான பணியின் போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.ஆனாலும் சிரமதானம் முடியும் வரை வீதியில் படையினர் மற்றும் காவல்துறையினர்  சிரமதானப் பணியில் ஈடுபட்டவர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின்; வாக்குமூலமொன்றை பதிவு செய்ய முற்பட்ட போதும் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்திருந்தார்.

தன்னை கைது செய்தால் மட்டுமே வாக்குமூலத்தை வழங்க தயாராக இருப்பதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்த போதும் காவல்துறை மறுதலித்துள்ளது.

முன்னதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வாக்குமூலத்தை காவல்துறை பதிவு செய்திருந்தது.

அதே போன்று கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல வளவினில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் காவல்துறையால் அச்சுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments