மாமனிதர் ரவிராஜிற்கு நினைவேந்தல்:குழப்பத்தில் சுமா அணி?மாமனிதர்; நடராஜா ரவிராஜ் அவர்களின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் சாவகச்சேரியில் நினைவு கூரப்பட்டது. 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நடராஜா ரவிராஜ் ரவிராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில் இடம்பெற்றது.


அமரர் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.


அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்க பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


குறித்த நினைவேந்தல் நிகழ்வினை குழப்பியடிக்க முற்பட்ட சுமந்திரன் அணி காலைவேளை 9 மணிக்கும் நினைவேந்தலை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தலைமையிலான பிரதான நிகழ்வு 9.30  மணிக்கும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


நேற்றைய தினம்  ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் ஆசீர்வாதத்துடன் மாமனிதர் நடராஜா இரவிராஜ் ஞாபகார்த்த மன்றம் என்னும் அமைப்பை நிறுவி அதனூடாக இந்த நினைவேந்தல் நிகழ்வை, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனையே சுமந்திரனின் சயந்தன் அணி குழப்பி நேரகாலத்துடன் நினைவேந்தலை நடத்தி கலைந்து சென்றுள்ளது


No comments