நாகோர்னோ - கராபாக் பகுதியில் அமைதிகாக்கும் பணியில் ரஷ்ய படையினர்!


நாகோர்னோ - கராபாக் சர்ச்சைக்குரிய பகுதியில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடத்திற்கு

நூற்றுக்கணக்கான ரஷ்ய அமைதி காக்கும் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

அஜர்பைஜானி மற்றும் ஆர்மீனிய படையினர் இடையே உக்கிர மோதல்கள் பல வாரங்களாக நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் திக்கட்கிழமை ரஷ்ய சமாதான நடவடிக்கையினை இரு தரப்பும் ஒப்புக் கொண்டபின்னர் குறித்த  இடத்திற்கு படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனியாவின் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்ட இந்த சமாதான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 01:00 மணி முதல் (21:00 GMT திங்கள்) நடைமுறைக்கு வந்தது.



தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆன்லைன் உரையின் போது, ​​ரஷ்ய அதிபர் புடின் கருத்துரைக்கையில்:-

ரஷ்ய அமைதி காக்கும் படையினர் முன்னரங்கப் பகுதிகளில் ரோந்து செல்வார்கள் என்று கூறினார். ரஷ்யப் படையினர பத்து விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை உலியனோவ்ஸ்கில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

இப்பகுதியில் 2,000 படையினர் இப்பகுதியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 5 ஆண்டு அமைதி காக்கும் பணிக்காக 90 கவச வாகனங்கள் அனுப்படவுள்ள.

இந்த ஒப்பந்தத்தில் போர்க் கைதிகள் பரிமாற்றம். இரு நாடுகளிடையே உள்ள பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடைகளை நீக்குதல் போன்ற விடயங்களும் உள்ளடங்குகின்றன.


குறித்த இடம் சர்வதேசத்தினால் அஜர்பைஜானின் பகுதி என அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1994 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி ஆர்மீனிய இனத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இந்த சமாதான ஒப்பந்தம் அஜர்பைஜானில் மகிழ்ச்சியையும் ஆர்மீனியாவில் கோபத்தையும் தூண்டியது.

விதிமுறைகளின் படி, அஜர்பைஜான் மோதலின் போது எடுத்த பல பகுதிகளை வைத்திருக்கும். அடுத்த சில வாரங்களில் ஆர்மீனியாவும் அருகிலுள்ள பல பகுதிகளிலிருந்து விலக ஒப்புக்கொண்டது.

ஒட்டுமொத்தமாக, இந்த ஒப்பந்தம் அஜர்பைஜானுக்கு கிடைத்த வெற்றியாகவும், ஆர்மீனியாவின் தோல்வியாகவும் அமைந்துள்ளது.


இந்த ஒப்பந்தத்தை அடுத்து ஆர்மீனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச உத்தியோகபூர்வ கட்டிடங்களை அடித்து தேசப்படுத்தியுள்ளனர். அத்துடன் பிரதமர் நிகோல் பாஷினியனை பதவி விலக அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஷ்ய ஆர்மீனியாவுடன் ஒரு இராணுவ கூட்டணியில் உள்ளது மற்றும் அங்கு ஒரு இராணுவ தளத்தை கொண்டுள்ளது. ஆனால் அது அஜர்பைஜானுடனும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது மற்றும் அது இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

அஜர்பைஜானை பகிரங்கமாக ஆதரித்த துருக்கியும் அமைதி காக்கும் பணியில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. இதனை துருக்கி இதுவரை எதுவித கருத்தையும் வெளியிடவில்லை.


No comments