கொரோனாவது கூந்தலாவது:அடுத்து நாமல் யாழில்?


தற்போதைய தொற்றுப் பரம்பல் நாளுக்கு நாள் மாறி வருவதாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாலும் இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்திலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து நாமல் ராஜபக்ஸ தனது பயணத்தை யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டுள்ளார்.

இலங்கை சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா விடுத்த எச்சரிக்கையினை தாண்டி அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்த வண்ணமுள்ளனர்.மக்களின் வாழ்க்கை முறையைப் பேணும் வழிமுறைகள் கருதி சுகாதார அமைச்சு நான்காவது எச்சரிக்கை மட்டத்தைப் பிரகடனம் செய்துள்ள நிலையில்; தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுமுள்ளது.


ஆயினும் எந்தவித தனிமைப்படுத்தல் சட்டத்தையும் கவனத்தில் கொள்ளாது நாமல் யாழ்.நல்லூர் கந்தசாமி கோவில்,நாகவிகாரையென படையெடுத்ததுடன் மாவட்ட செயலகத்திலும் கூட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments