தீண்டியது பாம்பு! ஒருவர் பலி!


மட்டக்களப்பு கிரானில் படுக்கையிலிருந்த நபரை பாம்பு தீண்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு  கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறுத்தானைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை கடந்த 29 ம் திகதி இரவு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பாம்பு கடித்துள்ளது.

பாம்புக்கடிக்குள்ளான குறித்த நபர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments