முழு இறைச்சியும் எனக்கு வேண்டாம்:மனோகணேசன்!தமிழர்களின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் இனப்பிரச்சினை தீர்வுதான்.அதற்கு பிறகுதான் இந்த 20,19 மற்றும் 18 எல்லாமுமென விளக்கமளித்துள்ளார் மனோகணேசன்.

கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ம மனோகணேசன் இதை அரசாங்கமும், எதிர்கட்சிகளும் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் வெனீஸ் நகர வியாபாரியை போன்று முழு இறாத்தல் இறைச்சியும் எனக்கு மட்டுமே என கேட்கும் பேராசைகாரனல்ல. இருப்பதை நாம் அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொண்டு, ஒரே நாட்டவராக வாழ்வோம் என்பதே என் கொள்கை என தெளிவுபடுத்தியதாகவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments