படரும் காட்டுத்தீ 14,100க்கும் மேற்ப்பட்டோர் அணைக்கும் பணியில்!


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தொடரும் காட்டுத்தீயினால்  2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலம் அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

33-ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

கலிபோர்னியாவில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுபது வழமை இருந்து இவ்வாண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால், குறைந்தது 7 பேர் பலியாகியுள்ளதோடு சுமார் 3,800 கட்டடங்கள் அழிந்து சேதமடைந்தன.

தற்போது ஏற்பட்டுள்ள பரவலான காட்டுத்தீயினை அணைப்பதற்கு 14,100க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள், 24 வெவ்வேறு தீச் சம்பவங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

No comments