சில்லறை வியாபாரி கைது?


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில்

ஈடுபட்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள், தராசு, ஆயிரத்து 530 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்குப் பகுதியில் ஹெரோயின் வியாபாரம் இடம்பெற்று வருகிறது என விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கொக்குவிலில் பகுதியல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் அவருடைய வீட்டில் இருந்து 13 கையடக்கத் தொலைபேசிகளும், தராசு ஒன்றும்,ஆயிரத்து 530 மில்லிக்கிராம் கெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபரையும் பொருட்களையும் பொறுப்பேற்றுக்கொண்ட கோப்பாய் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments