தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவு!அனுராதபுரம் உள்ளிட்ட தென்னிலங்கை பகுதிகளை சேர்ந்த சர்ச்சைக்குரிய புற்று நோய் கதிர்வீச்சு மருந்து பொருட்களை மக்கள் குடியிருப்பு மத்தியில் தீயிட்டு அழிப்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வரதராசா பார்த்தீபன் அம்பலப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் காணப்படுகின்ற மருத்துவக் கழிவுகளை எரியுட்டுகின்ற தொகுதி உரிய முறையில் தொழிற்படவில்லை என்ற பல குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக மருத்துவக் கழிவுகளினை எரியுட்டும் போதும் வெளிவரும் புகையினை 80 அடி உயரமான புகைக்கூட்டின் ஊடாகவே வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இங்கு காணப்படுகின்ற அத் தொகுதியின் புகைக் கூட்டின் உயரமானது ஏறத்தாழ 30 அடி முதல் 40 அடி வரையே காணப்படுகின்றது.

80 அடி உயரமான புகைகூட்டின் வழியே தான் மருத்துவக்கழிவுகளை தகனம் செய்கின்ற போது புகையினை வெளியேற்ற வேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அத்தொகுதியில் மருத்துவக் கழிவுகளினைத் எரியூட்டும் போது பின்பற்றப்படும் முறைமை மிகுந்த அதிர்ச்சியை அழிக்கின்றது .அங்கு மருத்துவக்கழிவுகளினை எரியூட்டும் போது எரியூட்டியின் கதவுகளை மூடாமல் திறந்து விடப்பட்டவாறே எரியூட்டப்படுகின்றன. இந் நிலை மிக மோசமான விளைவுகளைக் கொண்டு தரவல்லது என்று கூறப்படுகின்றது.

எரியூட்டும் தொகுதி மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக அவ்பகுதி உள்ளுராட்சி மன்றம் மற்றும் பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் கரிசனை செலுத்தவேண்டும் எனவும் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


No comments