வாதரவத்தையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம்!

தமிழ் மக்கள்  தேசிய  கூட்டணியின்  தேர்தல்  பிரச்சாரம் நேற்றையதினம்   வாதரவத்தையில் இடம்பெற்றிருந்தது 
ananthy  sasitharan
Add caption

தமிழ் மக்கள் தேசிய  கூட்டணியின் வேட்ப்பாளர் ரத்தினகுமார் அவர்களின்  ஒருங்கிணைப்பில்  நடைபெற்ற  இவ் நிகழ்வில் முன்னாள்   வடமாகாண முதல்வரும்,  பாராளுமன்ற  வேட்ப்பாளருமான சி.வி,விக்கினேஸ்வரன் அவர்களும் , முன்னாள்  வடமாகாண மகளிர்  விவகார அமைச்சரும் , பாராளுமன்ற வேட்பாளருமான அனந்தி   சசிதரன், மற்றும் சுரேஷ்  பிரேமச்சந்திரன், பேராசிரியர்  சிவநாதன் மற்றும் கிராம மக்கள்  என  பலரம் கலந்து கொண்டிருந்தனர் 

இங்கு  உரை நிகழ்த்திய  அனந்தி  சசிதரன்-

கடந்த காலங்களில்   என்னுடைய  அரசியல்   பிரவேசம் என்பது   உங்களுக்கு  தெரியும்  .
நான் சாதாரண அரசாங்க  உத்தியோகத்தராக யாழ்   மற்றும்  முல்லைத்தீவு  கிளிநொச்சி   மாவட்டங்களில்  கடமையாற்றியிருக்கின்றேன் .
என்னுடைய  அரசியல்   பிரவேசம் என்பது எனக்கும் எண்களின்  மக்களுக்கும்   இழைக்கப்பட்ட  அநீதி  காரணமாக  வந்தது 

ஏனென்றால்  அரசியல்  என்னுடைய  நோக்கமாக  இருந்தது   இல்லை 

இறுதி   போரில் என்னுடைய கணவர்  உட்பட  கையளிக்கப்பட்டு காணாமல்  போனோர்  பற்றியும் , போரில்   கொல்லப்பட்ட உறவுகளுக்கு   நீதியை   பெற்றுக்கொடுப்பதுமே  எனது   நோக்கமாக  இருந்தது  , அதனால்  தான் நான்  இந்த  அரசியல்   தளத்துக்கு வந்திருந்தேன் 

நான் ஒரு  பெண்  தலைமைத்த்துவ  குடும்பம் , இந்த  மண்ணில்   ஒவ்வொரு   பெண் தலைமைத்துவ  குடும்பங்களும்  படும்  துன்பங்களை  நான் என்னை  வைத்தே  பார்க்கின்றேன்   

இந்த  மண்ணில்  அக்காச்சி  குடியிருப்பு , தமிழீழ விடுதலைப்புலிகளின்  காலத்தில் அக்காச்சி  குடியிருப்பு  என்ற  ஒரு  மாதிரி   கிராமம் விடுதலைப்புலிகளால்  அமைக்கப்பட்டிருந்தது 

பின்னர் அது   திட்டமிட்ட  வகையில் அழித்தொழிக்கப்பட்டு  அந்த  மக்கள்  ஏழ்மையான நிலையில் இருந்த  பொழுது நான் மீளவும் நான்  மாகாணசபை  அமைச்சராக  இருந்த  காலகட்டத்தில்  எடுத்துக்கொண்ட  பிரயத்தனம் இன்றைக்கு  இந்த  கிராமத்தில்   புட்பாய்த்தொழிற்சாலையாக பரிணமித்துக்கொண்டிருக்கின்றது 

பூகோள  அரசுக்கு   முண்டு   கொடுக்கும் யாருக்கும்   போரால்  கஷ்ட்டப்பட்டு துடித்துக்கொண்டிருக்கும் மக்கள் கண்ணுக்கு  தெரிவதில்லை 
எங்கள்  மக்கள்   அரசுடம்  கையேந்தும்  நிலையில்தான் இருக்கின்றார்கள் 

முள்ளிவாய்க்கால்  இன அழிப்பு   போர் என்பது  காலங்காலமாக அரங்கேற்றப்பட்டு வந்த  ஒன்று  தான் 

இந்த  வாதரவத்தை பகுதியில்   கூட இந்திய  ராணுவத்தினரால்   சுட்டு  கொள்ளப்பட்டு   வைக்கோல் பட்டறைக்குள்  போட்டு   கொளுத்தியா  சம்பவங்களையும் நான் அறிவேன் 


எனவே  காலம் காலமாக  நடந்த இன அழிப்புக்கு நீதி  கேட்பது  என்பது தொடர்ச்சியாக  செய்யவேண்டிய  விடயம் எனவும் ,கடந்த காலங்களில்  நீங்கள்  தந்த  மக்கள்  பிரதிநிதி  என்ற  அங்கீகாரம் தான் நான்  ஐக்கிய  நாடுகள்  சபைவரை எண்கள்  மக்களுக்கு  இழைக்கப்பட்ட  அநீதிக்கெதிரான  நீதி கோருகின்ற செயற்பாட்டை சீராக செவ்வனே  செய்யக்கூடியதாக  இருந்தது  என்றும்  தெரிவித்திருந்தார்  

No comments