இராணுவ பயிற்சி: பட்டதாரிகளிற்கு கட்டாயம்?

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களாக அரச நிறுவனங்களில்

இணைத்துக்கொள்ளவுள்ளவர்களிற்கு இராணுவம் பயிற்சிகளை வழங்கவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் செப்டெம்பர்  மாதம் 2 ஆம் திகதி சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலின் போது அளித்த வாக்குறுதிக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் விபரங்கள் மற்றும் நியமனக்கடிதங்கள் மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி அவ்வப்பகுதி பிரதேச செயலாளர் ஊடாக இவர்களுக்குரிய நியமனக்கடிதங்களை வழங்குவதற்கு ஒழுங்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடகிழக்கை சேர்ந்த பட்டதாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அனைவருக்குமான பயி;ற்சிகள் படை அதிகாரிகளால் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய அரசின் கீழ் தெரிவு செய்யப்படுகின்ற சேவையாளர்கள் படை முகாம்களில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பயிற்சிகளை முன்னெடுப்பது வழமையாகும். 


No comments