ஷானி அபேசேகர கைது?


தேர்தல் காலத்தை ப்பயன்படுத்தி பழிவாங்கலில் கோத்தா அரசு மும்முரமாகியுள்ளது.

ரணில் அரசின் முக்கிய காவல்துறை அதிகாரியை இன்று காலை கோத்தா காவல்துறை கைது செய்துள்ளது. 


குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் ஷானி அபேசேகர தனது பணி நீக்கம் மற்றும் இடமாற்றத்துக்கு எதிராக அண்மையில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments