ஆயுதப்போராட்டத்தை தமிழ் மக்கள் நேசித்தனர்!


ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவர்கள். முன்னாள் முதல்வரது கட்சியில் இப்போதும் முன்னால் ஆயுத போராட்டக்குழுக்களை சேர்ந்தோர் இருக்கிறார்கள். 


அனந்தி சசிதரன் கூட நேரடியாக போராட்டத்தில் ஈடுபடாவிடினும் , அவரது கணவரின் பெயரை பாவித்தே அரசியல் செய்து வருகிறார். கணவர் குறித்து பேசாவிடில் அவருக்கு என அரசியல் செய்ய காரணங்களே இல்லை. சுரேஸ் பிரேமசந்திரன் ஆயுதம் ஏந்திய ஒருவர்.சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் ஆயுத போராட்டக்குழுக்களோடு இருந்தவர்கள்தான் என யாழ்.ஊடக அமையத்தில் இன்று (6) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கணேஸ் வேலாயுதம்; தெரிவித்துள்ளார்.

கிழக்கில் கருணா போன்ற ஆயுதக்குழுக்களையும் தேசிய கட்சிகளையும் நிராகரிக்க முன்னாள் முதல்வர்  அழைப்பினை விpடுத்திருந்தார்.

இதனை கண்டித்து கருத்து வெளியிட்டுள்ள ஜக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் திம்பு பேச்சு வார்த்தையின் ஊடாகத்தான் இந்த மாகாண சபை எமக்கு கிடைத்தது. அதற்கு இந்த ஆயுதப்போராட்டகுழுக்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. 

ஏம்.ஏ.சுமந்திரன் , தான் ஆயுத போராட்டத்தை ஆதரிக்கவில்லை என அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த போராளிகள் அனைவரும் சேர்ந்து இந்த மாகாண சபையை நடத்தி முன்னேற்றியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

No comments