கீரிமலையில் குண்டு வெடிப்பு: மூவர் காயம்!


யாழ்.கீரிமலையில் கைவிடப்பட்டிருத்த வெடிபொருளை கத்தியால் வெட்டும்போது அது வெடித்ததால் மூவர் காயமடைந்துள்ளனர்.

படையினரது உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த முன்னரங்க பகுதியில் இருந்த வெடிபொருளை கத்தியால் அறுக்க முற்பட்டபோதே அது வெடித்ததாக தெரியவருகின்றது.

குறித்த வெடிபொருட்களை மீட்டு மீன்பிடிக்கு விற்பனை செய்வதும் அரியாலையில் இத்தகைய வெடிப்பில் பலர் உயிரிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments