300 சிறுமிகள் மீது வன்கொடுமை! மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள பிரஞ்சு நாட்டவர்!

300 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாக பிராஞ்சு நாட்டவர் ஒருவர் இந்தோனேசியாவில் கடந்த மாதம் கைது செய்யப்படிருந்த நிலையில் அவர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள உல்லாச விடுதி ஒன்றில் அவர் 65 வயதுடைய ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ என்ற பிரஞ்சு நாட்டவர் கடந்த கைது செய்து செய்யப்பட்டார். அவர் கைது செய்யபட்டபோது அவரது அறையில் இரு சிறுமிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அத்துடன் அவர் பயன்படுத்திய மடிக்கணினியும் காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. குறித்த மடிக்கணினியில் ஆய்வுக்கு உட்படுத்திபோது, அதில் 10 வயது முதல் 17 வயதுள்ள நூற்றுக்கணக்கான சிறுமிகளுடன் சட்டவிரோதமாக பாலியலில் ஈடுபடும் காணொளிக் காட்சிகள் காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.

இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஞ்சு நாட்டவர், சட்டவிரோதமான வயது குறைந்த சிறுமிகளுடன் பாலியல் உறவை மேற்கொண்டது மட்டுமல்லாமல் அவற்றை படமாக்கினார் மற்றும் மறுத்தவர்களுக்கு சித்திரவை செய்து துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குறித்த நபருக்கு சிறையில் ஆயுள் தண்டனை அல்லது துப்பாகியால் தலையில் சுட்டு மரணதண்டனை வழங்கப்படலாம் எனக் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் பல முறை இவர் நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜகார்த்தா காவல்துறைக்குப் பொறுப்பான நானா சுட்ஜானா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

குழந்தைகளை அணுகி வேலை செய்வதன் மூலம் அவர்களை கவர்ந்திழுப்பார்.

அவருடன் உடலுறவு கொள்ள ஒப்புக்கொண்டவர்களுக்கு 17 முதல் 70 வரையான அமெரிக்க டொலர்களை சம்பளமாக வழங்கியுள்ளார். உடலுறவு கொள்ள மறுத்தவர்களை அடித்தும், அறைந்தும், உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக அபெல்லோ இந்தோனேசிய குழந்தைகளை துன்புறுத்தியதாக நம்புவதாகவும், இதனால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என சந்தேகப்பதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments