பிரித்தானியாவில் கடைகள் திறப்பு! கூட்டமாக முண்டியடித்த மக்கள்!

பிரித்தானியாவில் மீண்டும் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் 70 விழுக்காடு விலைக்குறைப்புடன் திறக்கப்பட்டன. இதனால் பெருமளவான மக்கள் முண்டியடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்களை வாங்குவதற்காகக் காத்திருந்தர்.

இதேநேரம் சில வணிக நிலையங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாது மக்கள் குவிந்து காணப்பட்டனர். சிலர் அதிகாலையிலேயே வந்து காத்திருந்தனர்.

மூன்று மாதங்களின் பின்னர் மேல் நிலைப்பள்ளிகளுக்கு சுவாசக் கவசங்களுடன் மாணவர்கள் சென்றுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டனர்.

வணிக நிலையங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் வரிசையை உருவாக்கவும் அதிகாலையிலேயே இரும்புக் கம்பிகளால் வேலி அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒக்ஸ்போர்டு சர்க்கஸில் உள்ள முதன்மை நைக் கடையில் மக்கள் இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்றாது பொருட்களை வாங்குவதற்காக முண்டியடித்து குவிந்து காணப்பட்டனர்.

பொதுமக்கள் பலரும் இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை எனக் கூறினர்.

இன்று காலை பர்மிங்காம், மார்பிள் ஆர்ச், லண்டன் மற்றும் டான்காஸ்டர் ஆகிய இடங்களில் ப்ரிமார்க்கிற்கு வெளியே மக்கள் கூட்டம் அதிகளவில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பிரைட்டனில் மக்கள் அதிகாலை 3 மணிக்கு வரத் தொடங்கினர்.

இன்று திறக்கப்பட்ட ப்ரிமார்க்கின் 153 கடைகளின் பணியாளர்கள் கடையில் வாடிக்கையாளர்களை வாழ்த்தியதுடன் கடையை மிகவும் நெரிசலாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வாெரு பேராக கடைக்குள் நுழைய அனுமதித்தனர்.

ஜாரா, ஜான் லூயிஸ் மற்றும் டெபன்ஹாம்ஸ் உள்ளிட்ட போட்டி கடைகள் கடைக்காரர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் 70 சதவீதத்தை குறைத்துள்ளன.

தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகளின் படி இங்கிலாந்தில் 64 விழுக்காடு மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற மிகவும் பயப்படுவதாகக் கூறுகின்றனர். 20 விடுக்காடு மக்கள்கடையில் ஒருபோதும் காலடி வைக்க மாட்டோம் என்ற கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments