மீளத்திறக்கப்பட்ட தினத்தன்றே சீல்?


இன்று காலையே திறக்கப்பட்ட நெல்லியடி பொதுச்சந்தைக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. 


இன்று முதலாம் திகதி முதல் நெல்லியடி பொதுச்சந்தை கொரோனா தடுப்பு முறையை பின்பற்றி திறக்கப்படும் என்ற அறிவிப்பை கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் வெளியிட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இன்று நெல்லியடி பொதுச்சந்தையும் திறக்கப்பட்டது. 

இன்று சந்தை நடவடிக்கைகள் ஆரம்பித்திருந்த நிலையில் மதியமளவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பார்வையிடட போது, விற்பனையாளர்கள் சிலர் போதிய சுகாதார இடைவெளியினை பேணாதும்,முகக்கவசமின்றியும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது.

சந்தையை மீள ஆரம்பிப்பது பற்றிய கலந்துரையாடலின் போது, பொதுமக்களிற்கு சுகாதார அறிவுறுத்தல்களை வழங்கி, வர்த்தக நடவடிக்கையை ஒழுங்கமைக்க வேண்டுமென பிரதேசசபை நிர்வாகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதன் பிரகாரம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றாமையாலேயே பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது.

No comments