இந்திய சீனா எல்லையில் மோதல்! 20 இந்தியப் படையினர் பலி!


இந்தியா - சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இம்மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு படை அதிகாரியும் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

பின்னர் தாக்குதலில் படுகாயமடைந்த 17 படையினரும் உயிரிழந்துள்ளாக இந்திய இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

No comments