மீண்டும் கதிர்காம யாத்திரை:திரும்பிய தூக்கு காவடி?

இலங்கை காவல்துறையினால் சாவகச்சேரியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கதிர்காம யாத்திரை இன்று மீள சந்நிதியிலிருந்து
புறப்பட்டுள்ளது.

முன்னதாக சந்நிதியிலிருந்து பறப்பட்ட யாத்திரை கொரோனா தொற்றினை  காரணங்காட்டி சாவகச்சேரியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்து.

தற்போது பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இன்று மீண்டும் உரிய அனுமதி சகிதம் யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

இதனிடையே முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில், நேர்த்திக்கடன் செய்யும் பொருட்டு வந்த தூக்குக்காவடியை பொலிஸார் வழிமறித்து திருப்பிய அனுப்பிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் குவிக்கப்பட்டு நேற்று பொங்கல் நிகழ்வு
நடத்தப்பட்டது.

முள்ளியவளை மகா விஸ்ணு ஆலயத்தில் இருந்து காட்டு விநாயகர் ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக தூக்கு காவடி எடுத்து வந்துள்ளார்கள்.
இதன்போது இவர்களை வழிமறித்த பொலிஸார் தூக்கு காவடியில் தொங்கியவரை இறக்கி, அவரது முதுகில் குத்தப்பட்டு இருந்த செடில்களை கழற்றிவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

காலம் காலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும், முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கும் எந்த தடைகள் வந்தாலும் நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள் இம்முறை கவலை கொண்டுள்ளனர்.

No comments