சிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா? - நேரு குணரட்ணம்

ஏறத்தாள மூன்று மாதங்களின் முன் மார்ச் 17ஆம் நாள், "சிறீலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்துகிறதா கொரொனா?", எனத்தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இதே முகநூல்ப்பக்கத்தில்
வரைந்திருந்தேன். "சிறீலங்காவில் ஒரு அரசாங்கம் பதவியில் இருக்கிறதா? என என்னும் வகையில், அனைத்துவிவகாரங்களும் கோத்தாவின் கீழ் இராணுவமயப்பட்டுவருவது, தொடர்;ந்தும் தீவிரமடைகிறது",  எனவேறு அதில் குறிப்பிட்டிருந்தேன்.

அதன் பின்னரான 3 மாதங்களில் அது நோக்கிய பாதையில் பலவிடயங்கள் நடந்தேறின. இவ்வாறான ஒரு நிலையின் ஆபத்தை கடந்த ஆண்டு சனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே, சர்வதேச பரப்பில் பலர் பார்த்த தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாகவே தெரிவித்திருந்தேன். தற்போதைய சனாதிபதி தான் இதுவரையிலான சனாதிபதிகளில் அதிகாரம் குறைந்தவர். ஆனால் இவர் தான் அனைவரிலும் அதிகாரம் கொண்டவர் போல் நடந்து கொள்வார் என்பதையும் அதில் தெரிவித்திருந்தேன்.

ஏனோ எங்களிடம் ஒருவருடைய குணாம்சங்களின் அடிப்படையில், அவர் எப்படி நடந்து கொள்வார்? என்பதை சரியாக கிரகித்து, அதற்கேற்ற வகையில் எம்மை முன்கூட்டியே ஒருங்கமைத்துக் கொள்ளும் பக்குவம் அரிதாகவே வெளிப்படுகிறது. தற்போது தனது இராணுவ ஆட்சியை பெரியளவில் கோத்தா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். அதில் அவர் புதிதாக ஒரு சனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கி, அதில் உள்ளவர்களின் பெயரையும் அதன் பணிகளையும் வேறு பட்டியலிட்டுள்ளார்.

சனநாயக அரச கட்டமைப்பு எனக் கூறிக் கொள்ளும் இன்றைய அரச கட்டுமானத்தில், அமைக்கப்பட்டுள்ள அந்த சனாதிபதி செயலணியின் 13 உறுப்பினர்கள் வருமாறு,  
Major General (Retired) Kamal Gunaratne – Secretary to the Ministry of Defence; Lieutenant General Shavendra Silva -Commander of the Sri Lanka Army; Vice Admiral Piyal de Silva – Commander of Sri Lanka Navy; Air Marshal Sumangala Dias – Commander of the Sri Lanka Air Force; C.D. Wickremarathne – Acting Inspector General of Police; Major General (Retired) Vijitha Ravipriya – Director General of Customs; Major General (Retired) Jagath Alwis – Chief of the National Intelligence; Major General Suresh Salley -  Director of State Intelligence Service 9; Major General A. S. Hewavitharana – Esquire Director of Army Intelligence Unit 10; Captain S.J. Kumara – Esquire Director of Navy Intelligence Unit 11; Air Commodore M.D.J. Wasage – Director of Air Force Intelligence Unit 12; T. C. A. Dhanapala -  Deputy Inspector-General of Police, Special Task Force of Police

இப்போது சொல்லுங்கள் இதில் சிவில் அரச பணியாளர் யார்? அனைவரும் ஒருவிதத்தில் பாதுகாப்பு கட்டுமானங்களின் தளபதிகள், இல்லையேல் ஓய்வுபெற்ற தளபதிகள். பலருக்கு முள்ளிவாய்காலுடன் வேறு பலத்த தொடர்பு உண்டு. மறந்துவிடாதீர்கள் இன்றும் மகிந்தா தலைமையில் ஒரு அமைச்சரவை பதவியில் வேறு உண்டு.

சரி இவர்களின் பணி தான் என்ன? நாட்டின் பந்தோபஸ்து ஏதாவது ஆபத்தில் உள்ளதா? இல்லை அண்டை நாட்டு மன்னர் யாராவது போர் பிரகடனம் செய்துவிட்டாரா? ஏற்கனவே மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த கோவிட்-19 வைரஸ் விடயம் கூட, விசேட செயலணி ஒன்றின் ஊடாக முழுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கடந்து என்ன தேவை? அமைக்கப்பட்டுள்ள செயலணியின் பணி குறித்து கோத்தா பின்வருமாறு தெரிவிக்கின்றார்

create a virtuous, disciplined and lawful society which respects the rule of law and justice as it stated in the policy statement “Vistas of Prosperity and Splendour,”  And, whereas it has been recognised that the security of the country is a key factor in establishing economic strategies aimed at the development of a country, And, emphasising the equal protection of the law for the well-being of the people and for building a civilised society

நீதி, பாதுகாப்பு, பொருளாதாரம் எனப் பரந்த பரப்பு ஒன்று இங்கு குறிப்பிடப்படு;கிறது. அவ்வாறாயின் முதலில் மகிந்தா தலைமையிலான அமைச்சரவையை கலைத்துவிடவேண்டியது தானே? பிறகேன் ஒரு பொம்மை அரசு? இருக்க இந்த 13 பேர் அனைத்தையும் பார்க்க இருக்கையில், ஏன் அமைச்சுகள் என்ற போர்வையில் கையாலாகாதவர்கள்? அவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டியது தானே?

கடல், ஆகாயம், தரை வழியாக நுழையும் போதைவஸ்தையும் இவர்கள் இல்லாமல் செய்து விடுவார்களாம்! அப்படியானால் ஆகாயம் வழியாக வருவதை அனுமதிக்கும் சுங்கத்தையும், கடல் வழியாக வருவதை தடுக்க தவறும் கடற்படையையும், தரை வழியாக நகர அனுமதிக்கும் பொலிசையும் கலைத்துவிட வேண்டியது தானே? இந்த 13 சுப்பர்மான்களும் பறந்து, பறந்து தடுத்துவிடுவார்களே! யாருக்கு கோத்தா காதில் பூச்சுத்துகிறார்?

அது மட்டுமல்ல, கீழ்க்கண்ட அறிவுறுத்தலினூடாக அனைத்து அரச மட்டத்தை மட்டுமல்ல, ஏனையவர்களையும் பொது மக்கள் உட்பட, இவர்களிற்கு கீழ்ப்படிந்து, நடக்குமாறு வேறு கோத்தா மிரட்டியுள்ளார் என்றே கூறலாம்...
"I hereby instruct all Government Officers and others to provide all possible assistance and provide all information that may be provided. And, I do hereby direct the said Task Force to report to me, all cases of delay or default on the part of any Public Officer or Officer of any Ministry, Government Department, State Corporation or other similar institution in the discharge of duties and responsibilities assigned to such public officer or such institution".

குறுகிய காலத்தில் சிங்கள மயமாக்கலையும், பௌத்த மயமாக்கலையும் விரைவுபடுத்த, தீவிரப்படுத்த, இது வலிகோலும். மறுபுறத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிடுவதை உறுதிப்படுத்த, இந்த செயலணி பெருமளவு பங்கை வகிக்கும். அதனூடாக விரைந்து முன்னெடுக்கப்படும், புதிய அரசியல் அமைப்பு ஒன்றினூடாக, இதுவரை இல்லாத அதிகாரங்களுடன் அமையும் சனாதிபதி பதவியினூடாகவும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முறைமைப்படுத்தும் அவ்வரசியல் அமைப்பையும், விரைந்து அமுல்நடத்தி முன்னகர்த்தும் பொறுப்பில், தொடர்ந்தும் இந்த செயலணி தொடர்ச்சியாக வகிபாகத்தைக் கொண்டிருக்கும்...

எனது மார்ச் மாதக் கட்டுரையை, "கோவிட்டை கடந்து பல ஆபாயங்கள் கருமேகங்களாக சிறீலங்காவை சூழ ஆரம்பித்துள்ளன", என முடித்திருந்தேன். அந்த கருமேகங்கள் என்ன என்பது தற்போதாவது புரிகிறதா? சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் போதான தொலைக்காட்சி ஒலிபரப்பில், அடுத்து ஏப்பிரலில் பாராளுமன்றத் தேர்தல் பின்னர் ஓகஸ்டில் மாகாண சபைத் தேர்தல், இவ்வாறு தேர்தல்களிற்குள்ளேயே தமிழ் அரசியல் மூழ்கி சிதைந்துவிடும்... அதனால் அதைக்கடந்து, எதனையும் செய்யும் நிலை அதற்கு இராது என்றிருந்தேன். தற்போதைய நிலையில், தமிழர்களது பாராளுமனறத் தெரிவு எத்தகைய மாற்றத்தையும் பாராளுமன்றத்தில் கொண்டிராது, என்பதைக் கடந்து, கோத்தாவின் புதிய அரசியலமைப்பில் மாகாணசபையொன்று இருக்குமா? இருந்தால், அது அதிகாரம் கொண்டதாக இருக்குமா? என வேறு பல கேள்விகள் உண்டு. என்ன தான் இருந்தாலும் அவை அமுலுக்கு வேறு அனுமதிக்கப்படுமா?

No comments