முடக்க நிலையை மீறிய டொமினிக் கம்மிங்! ஆதரவு தெரிவித்த பொறிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் முடக்கநிலையை மீறிய பிரித்தானியப் பிரதமரின் பிரதான ஆலோசகர் டொமினிக் கம்மிங்சை ஆதரவாகப்
பேசியிருக்கின்றார்.

பிரிட்டனில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்க நடவடிக்கையை மீறியதன் தொடர்பில் கம்மிங்ஸ் பதவி விலக வேண்டும் பழமைவாதக் கட்சிக்குள் கோரிக்கை எழுந்தன.

இந்நிலையில், சொந்தக் கட்சிக்குள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துவரும் வேளையில், பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கம்மிங்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாத இறுதியில், லண்டனிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமது பெற்றோரின் வீட்டுக்குத் திரு கம்மிங்ஸ் தமது குடும்பத்தினரைக் மகிழுந்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். அதை அவர் ஒப்புக்கொண்டார்.

தம் மனைவி கிருமித்தொற்று அறிகுறிகளால் அவதிப்பட்டதால், மகனுடைய உடல்நலனில் அக்கறை கொண்டு, தம் பெற்றோரின் இல்லத்துக்குச் சென்றதாகத் கம்மிங்ஸ் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments