துணுக்காய் இராணுவ சோதனைச்சாவடியை அகற்றுக

முல்லைத்தீவு - துணுக்காய் சந்தியில் அமைந்துள்ள இராணுவச் சோதனைச்சாவடி அகற்றப்பட வேண்டுமென துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இராணுவத்தினரால், வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெறுவதானால் மக்கள் அச்சத்திற்கும், பலத்த இடர்பாடுளுக்கும் உள்ளாவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த துணுக்காய்ச் சந்தியில் உள்ள மூன்று வீதிகளிலும், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு இராணுவத்தினரால் வீதித் தடைகள்ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெறுவதனால், துணுக்காய் - அக்கராயன் வீதயைப் பயன்படுத்தும் அமைதிபுரம், ஆரோக்கியபுரம், தென்னியங்குளம், கோட்டகட்டி, அம்பலப்பெருமாள், உயிங்குளம் உள்ளிட்ட இடங்களுக்குரிய பொதுமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். - என்றார்.

No comments