விடைபெற்றார் தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா

பிரித்தானியாவில் தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இறுதி வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை St Marylebone Crematorium, East End Road,  East Finchley. London  N2 0RZ என்ற இடத்தில் நடைபெற்றது.

முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 13.45 மணி வரை நடைபெற்ற வணக்க நிகழ்வில் தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா தமிழர் தாயகமான தமிழீழத்திற்கு ஆற்றிய பணியை மதிப்பளித்து அவரின் உடலுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்க்கப்பட்டு தேசத்தின் இளஞ்சுடராக செல்வி திக்சிகா மதிப்பளிக்கப்பட்டார்.

திக்சிகா பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் இருந்து தாயகம் நோக்கிய பணிகளை செவ்வனே செய்திருந்தார். கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டநிலையில் அவர் சாவடைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.No comments