11பேர் பலியான துப்பாக்கிசூட்டுக்கு எதிராக கிளர்ந்த யேர்மன் மக்கள்:

அண்மையில் ஜேர்மன் ஹனாவ் நகரில் 11 பேர் கொல்லப்பட்ட இரட்டை துப்பாக்கிச் சூட்டு படுகொலையை கண்டித்து  சனிக்கிழமை நேற்று ஹனாவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வலதுசாரி குழுக்கள் மற்றும் இனவெறிக்கு எதிராக பாரிய பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

பிராங்பேர்ட்டுக்கு கிழக்கே 15.5 மைல் (25 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள மத்திய ஜெர்மன் நகரில் நடந்த போராட்டங்களில் சுமார் 3,000 பேர் பங்கேற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதன்கிழமை பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூருவதற்காக நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் ஃப்ரீஹீட்ஸ்ப்ளாட்ஸில் - எனும் சுதந்திர சதுக்கத்தில் "இனவெறி மற்றும் பாசிசத்திற்கு எதிராக ஐக்கியம்" என்று எழுதப்பட்ட ஒரு பதாகையோடு  நகரம் முழுவதும் நடந்து எதிர்ப்பினையும் கண்டனங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments