தேர்தலிற்கு தயார்?

2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தை கலைத்தால் உடனடியாக ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடாத்த தயார் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய
இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 25, 27 அல்லது 28 ஆம் திகதிகளில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என கூறினார்.
கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.
இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில்
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments