ரணில்-மகிந்த பேச்சு!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்வது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் இன்றைய மாலை நேரத்திற்குள் அறிவிக்கப்பட்டால் இன்றிரவே புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்வாரென்றும் – இல்லாதபட்சத்தில் நாளை அந்த நிகழ்வு நடக்குமென்றும் அறியமுடிந்தது.
இதற்கிடையில் தேர்தல் தோல்விக்கான பொறுப்பை ஏற்று கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிவித்துள்ள சஜித் பிரேமதாச , புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்டமைப்புகளை பாதுகாக்க வலியுறுத்தியுள்ள அவர் , தமக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

No comments