அண்ணா அறிவாலையத்துக்குச் சென்ற ஹெச்.ராஜா!

பாஜகவின் தேசியச் செயலாளராக ஹெச்.ராஜா, திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் எதிர்த்து தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகிறார். சமீபத்தில் கூட முரசொலி அலுவலகம் விவகாரம், சுஜித் மரணம் தொடர்பாகவும் ஸ்டாலினை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற ஹெச்.ராஜா, ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது இளைய மகள் திருமணத்துக்கான திருமணப் பத்திரிகையை வைத்து, கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என்று அழைத்தார். ஸ்டாலின் வருகிறேன் என்று உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது திருமண விவரங்களைத் தவிர அரசியலோ அல்லது வேறு எதுவும் பேசப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அரசியலில் எதிரெதிர் துருவங்களில் உள்ள இருவரும் நேரில் சந்தித்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

No comments