குலத்திற்கு முதலிடம் கொடுப்பவர் அவசியமில்லை

நான் தவறு செய்தால் அவற்றை சரி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். பொது மக்கள் முன் வந்து மன்னிப்புக் கோரவும் நான் தயங்க மாட்டேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (10) காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

தனது குடும்பத்திற்கும், குலத்திற்கும் முதலிடம் கொடுக்கும் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையில்லை.

இந்நாட்டின் எதிர்காலத்தை மாளிகையின் உள்ளே ஒரு குடும்பம் தீர்மானிக்க கூடாது. இந்நாட்டின் கடின உழைப்பாளிகளே தீர்மானிக்க வேண்டும்.

நாம் உருவாக்கும் புதிய நாட்டில் திருட்டு, மோசடி மற்றும் ஊழலுக்கு இடமில்லை. இந்நாடு இதுவரை கண்டிராத தூய்மையான அரசாக எமது அரசு மாறும். இதற்கு எதிராக செயற்பட யாரும் இருந்தால் அவர்கள் தங்கள் பைகளை கட்டிக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

எமது நிர்வாகத்தின் கீழ் மக்கள் சிறை ஆடை அணிகிறார்களா? இல்லையா? என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்க மாட்டார்கள். அந்தப் பொறுப்பு நீதித் துறையிடம் விடப்படும்.

தேசிய பாதுகாப்பை பாதுகாக்க, அந்தப் பொறுப்பில் தங்களை நிரூபித்த, உண்மையில் போரில் சண்டையிட்ட ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேசிப் பாதுகாப்பின் பொறுப்பு சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும். - என்றார்.

No comments