புறோக்கர் தொழிலில் ஆறுமுகம் தொண்டமான்?


தீர்வு பற்றி பேச வரும் கூட்டமைப்பிடம் பேசப்போவதில்லையென கோத்தபாய திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் தான் தரகு வேலைக்கு தயார் என ஆறுமுகம் தொண்டமான தெரிவித்துள்ளார்.தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சகலருக்கும் வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும்.  கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களே தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
கோட்டாவின் ஆட்சியில் 25 பேர்ச் காணியில் தொழிலாளர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments