கோத்தாவிற்கு தேர்தல் கால சலுகையாம்?


வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணிகளின்போது அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ஆகியோரின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

No comments