ஹிஸ்புல்லாவின் கம்பஸ் குறித்து சவுதியிடம் விசாரணை!

மட்டக்களப்பு கம்பஸ் நிறுவனத்திற்கு நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சவூதி அரேபியாவிடம் விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியினூடாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் சவூதி அரேபிய நிறுவனம் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் பதிவாகாதமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கம்பஸ் இற்காக 4.5 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதுடன், அதில் 3.6 மில்லியன் ரூபா குறித்த சவூதி அரேபிய நிறுவனமிடமிருந்து பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நிதியில் தற்போது 36,000 ரூபாவே எஞ்சியுள்ளதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் 7 வங்கிகளினூடாக நிதிப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த நிதி வேறு ஏதும் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு கம்பஸ் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments