குணரத்னவும் பதவி துறந்தார்!

மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்ஷல் பெரேராவும் தனது ஊவா மாகாண ஆளுநர் பதவியை கடந்த 01 ஆம் திகதி  இராஜினாமா செய்திருந்தார்.
ஜனாதிபதியின் தனி அதிகாரத்தின் கீழேயே மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆளுனர்கள் இராஜினாமா செய்து கொள்வதற்க்கான காரணம் இதுவரை புரியாத புதிராகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments