தடம்புரண்டது இராணுவ வாகனம் - ஒருவர் பலி 08 பேர் படுகாயம்


முல்லைத்தீவு- கேப்பாபிலவு இராணுவ படைத்தலமையக பகுதியில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இராணுவச் சிப்பாய் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், இராணுவத்தினர் 8 போ் படுகாயமடைந்துள்ளனா்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு

 ஏனைய 5 சிப்பாய்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments