225 எம்.பிக்களில் 80 பேர் க.பொ.த சாதாரணம் சித்தியடையவில்லை

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 70 தொடக்கம் 80 போ் நாடாளுமன்ற உறுப்பினா்களாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கின்றாா்.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத 70 முதல் 80 வரையான நபர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெறக் கூடிய நபரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தக் கூடாது. நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒருவரை நிறுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பக் கூடிய தலைவரை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தினால், அவருக்கு ஆதரவளிக்கப்படும்.

அப்படியான தலைவரை நிறுத்தவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments