"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி" பாரதிராஜ பரபரப்பு கருத்து!

(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபல நாளேடு ஒன்றுக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்று கொடுத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார், மேலும் சீமான் குறித்து அவர் அளித்த நேர்காணல் பதிவு வாசகர்களுக்கு தருகிறோம்.

கலைஞர், ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை எப்படி பார்கிறீர்கள்? எனும் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் கூறியது
"இது கொடுமையான கேள்வி இருவருமே ஆளுமையான தலைவர்கள் இப்போது அப்படி இல்ல்லாததால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் மாதிரி ஆகிவிட்டார்கள் இப்போது. இப்போ கண்டதெல்லாம் விளையாடுகிறது. அனால் சீமான் ஒருவன்தான் அரசியலை மண்சார்ந்து நேசிக்கிறான்.7வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வரும் தமிழகம் சோமாலியா மாதிரி ஆகிவிடும் , என்று தீர்க்கதரிசியாக சொன்னான் இப்போது நடக்குதா இல்லையா!

சீமான் இந்த மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று துடிக்கிறான், அவன் பேச்சில் பொய் இல்லை, அவன் சின்னப் பையன் இல்லை, ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி.

மக்களவை தேர்தலில் சீமானின் நாம்தமிழர் கட்சி வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதே? எனும்கேள்விக்கு

மிகுந்த சந்தோசமாக உள்ளது. அவனுக்கென்று ஒரு பெரிய அலை உள்ளது இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களால் சீமான் நிச்சையம் தூக்கி நிறுத்தப்படுவான்.ஓட்டுக்கு பணம் கொடுக்காமலேயே இவ்வளவு வாக்குகளை வாங்கியுள்ளது, மக்கள் அவன்மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது, கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று.
இவ்வாறு திருத்தம் இயக்குனர் பாரதிராஜ   தெரிவித்துள்ளார்.

    


No comments