கோத்தாவிற்கு எதிராக மேலும் 10 வழக்குகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றில் மேலும் 10 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ரோய் சமாதானம் என்பவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தார்.

அவருடன் மேலும் 10 பேர் இணைந்துள்ளனர்.

No comments