தனியார் வகுப்பிற்குச் சென்ற மாணவன் விபத்தில் பலி

திருகோணமலை- கண்டி வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை சிறுவன் உயிாிழந்துள்ளான்.

தனது சகோதரனுடன் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவனே விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.

இந்தச் சோகச் சம்பவம் திருகோணமலை – கண்டி பிரதான வீதியின், பாலம்போட்டாறு பகுதியில் நடந்துள்ளது.

விபத்தில் திருகோணமலை – முத்துநகர், பாலம்போட்டாறு பகுதியை சேர்ந்த சதுன் மதுசங்க (12 வயது) என்பவரே உயிரழந்துள்ளார்.

என கூறியுள்ள பொலிஸாா், சிறிய ரக பாரவூர்தி மோதி விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments