மேகத்துக்குள் மறைந்தால் ராடாரில் போர் விமானம் தெரியாது;கேலிக்குள்ளாகிய மோடியின் பேச்சு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொழில்நுட்பம் குறித்து தவரான கருத்துக்களை கூறியுள்ளதால் கடுமையான கேலிக்கு உள்ளாகியுள்ளன.

அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில்
பாகிஸ்தானில் பிப்ரவரியில் இந்திய போர் விமானங்கள்  நடத்திய ஆகாயத் தாக்குதல் பற்றி அதில் அவர் பேசியிருந்தார்.

பிப்ரவரி மாதத்தின்போது வானத்தில் மேகங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியப் போர் விமானங்களைப் பாகிஸ்தானிய ரேடார் சாதனங்களால் கண்டுபிடிக்க முடியாது ; அதனால்தான், அப்போது தாக்குதல் நடத்துவதற்குத் தாம் உத்தரவிட்டதாகத் திரு. மோடி குறிப்பிட்டிருந்தார்.

பாரதீய ஜனதா கட்சி திரு. மோடி கூறியவற்றை Twitterஇல் பதிவேற்றம் செய்த சற்று நேரத்தில் அகற்றியது.

ஆனால், நிபுணர்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் அதைக் கேலி செய்து வருகின்றன.

ரேடார் சாதனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதுபற்றித் திரு. மோடிக்கு யாரும் விளக்கமளிக்கவில்லை போலிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை  இதுதான்  சமையம் என்று மோடியைக் கேலி செய்யும் கேலிச்சித்திரங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

மேலும் அதே நேர்காணலில்,மின்னிலக்கப் படங்களை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிய முதல் நபர் தாமாகவே இருக்கமுடியுமென்றும்,அந்த மின்னஞ்சலை 1987 அல்லது 1988இல் தாம் அனுப்பியதாக அவர் கூறினார் ஆனால் உண்மையில், இணைப்பு கொண்ட மின்னஞ்சல் முதன்முதலில் 1992இல் நதேனியல் போரன்ஸ்டீன் எனும் ஆய்வாளரால் அனுப்பப்பட்டது.
என்று இணையம் முழுவதும் மோடியை வைச்சு செய்கிறார்கள், ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு பிழையான தகவல்களை வழங்குவதும் தொழிநுட்பத்துக்கு ஒவ்வாத விடையங்களை சொல்லி கேலிக்குள்ளாகியுள்ளது உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானம் என்று இந்தியர்கள் கருதுகின்றனர்.

No comments